பாக்ஸ் ஆபீஸை ஆளப்போகும் "அசுரன்" - முன்னோட்டம்!

வியாழன், 3 அக்டோபர் 2019 (18:59 IST)
பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை என தமிழ் சினிமாவின்  மிகச்சிறந்த படங்களை இயக்கிய வெற்றிமாறன் தற்போது தனுஷை வைத்து வித்யாசமான படத்தை இயக்கி ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஏங்க வைத்துள்ளார். தனுஷுக்கு ஜோடியாக மலையாள லேடி சூப்பர் மஞ்சு வாரியர் நடித்துள்ளார். இரண்டு சிறந்த நடிப்பு ஜாம்பவான்களால் உருவாகியுள்ள அசுரன் படம் நாளை உலகம் முழுவதும் திரைக்கு வரவிருக்கிறது. 


 
பூமணி எழுதிய வெக்கை நாவலை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தின் கதை காஸ்ட்யூம், லொகேஷன் என அனைத்து வித்யாசமான முறையில் இருந்தது இப்படத்தின் மிகப்பெரிய பப்ளஸாக அமைந்தது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் மிகப்பெரிய வரவேற்பை பெற்று படத்தின் வெற்றியை நிலைநிறுத்தியது. அதையடுத்து “வா எதிரில் வா" என்ற லிரிகள் வீடியோ பாடல் ரத்தம் தெறிக்க தெறிக்க வெளிவந்து ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது. 
 
இப்படி படம் ஆரம்பித்த நாளிலிருந்தே தாக்கத்தை ஏற்படுத்தி வந்ததோடு அடுத்தடுத்து வெளிவந்த அப்டேட்களுக்கும் மக்கள் மத்தியில் பாசிட்டீவ் விமர்சனங்களே கிடைத்தது. இப்படத்தில் 15வது சிறுவனம் கொலை செய்துவிடுவானாம், அவனைக்காப்பாற்ற அவனுடைய தந்தை மகனை அழைத்துக்கொண்டு காட்டிற்குள் செல்வாராம். அங்கிருந்து முன்கதை, பின் கதை என திரைக்கதை நகரும் என படத்தின் இயக்குனர்  சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். மேலும், இப்படம் அப்பா- மகனுக்கும் இடையில் உள்ள உறவை மிக அழகாக அசுரன் படம் காட்டும் என்றும் கூறப்படுகிறது. எனவே,நாளை வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்களை ஒன்றிணைத்து அவர்களுக்குள் அப்பா - மகன் பாசத்தை புகட்டுகிறதா என பார்ப்போம். 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் "பப்பி" ப்ரெஸ் மீட் ஸ்டில்ஸ்!