மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மெஜஸ்டிக் மல்டிமீடியாவுடன் இணைந்து தயாரித்திருக்கும் படம் சிக்குபுக்கு. மணிகண்டன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
மறைந்த இயக்குனர் கம் ஒளிப்பதிவாளர் ஜீவாவின் அசோஸியேட்தான் மணிகண்டன். தாம் தூம் படத்தில் ஜீவா முடிக்காமல்விட்டப் பகுதிகளை இவர்தான் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிக்குபுக்கு ஒரு ரொமாண்டிக் காமெடி. ஆர்யா, ஸ்ரேயா நடித்துள்ளனர். முக்கியமான வேடத்தில் ப்ரீத்தி ராவ் நடித்துள்ளார்.
லண்டனில் ஆரம்பித்து காரைக்குடியில் முடிவது போல் கதை அமைக்கப்பட்டுள்ளது. சண்டைக் கோழிகளாக இருக்கும் ஹீரோவும், ஹீரோயினும் தங்கள் காதலை கண்டடைவதுதான் படத்தின் கதை.
ஹரிஹரன், லெஸ்லி லிவிஸ் இசையமைத்துள்ளனர். பாடல்கள் வாலி, பா.விஜய். ஆர்பி.குருதேவ் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். வசனம் எஸ்.ராமகிருஷ்ணன்.