ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் வழங்க ராகவேந்திரா புரொடக்சன் தயாரித்திருக்கும் படம் காஞ்சனா. ஆவி படம்.
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த முனி படத்தின் இரண்டாம் பாகமாக காஞ்சனா உருவாகியிருக்கிறது. முதல் பாகத்தில் இருட்டைப் பார்த்தாலே பயப்படுகிறவராக லாரன்ஸ் நடித்திருந்தார். அவரது உடலுக்குள் ராஜ்கிரணின் ஆவி புகுந்து எதிரிகளை பழிவாங்கும். அதேபோலொரு கதையைதான் இதிலும் லாரன்ஸ் எடுத்துக் கொண்டிருக்கிறார். பெண் வேசத்தில் ஒரு பாடலுக்கு ஆட்டமும் போடுகிறார்.
லாரன்சுக்கு ஜோடி லட்சுமிராய். முக்கியமான வேடத்தில் சரத்குமார். அவர் என்ன வேடத்தில் நடித்துள்ளார் என்பதை ரகசியமாக வைத்துள்ளனர். காஞ்சனாவின் ஆகப்பெரிய விஷயம் சரத்குமாராகவும் இருக்கலாம்.
ஆவி படம் என்பதால் கிராஃபிக்ஸ், அனிமேஷனுக்கு கணிசமாக செலவழித்திருக்கிறார்கள். லாரன்சுக்கு தெலுங்கில் நல்ல மார்க்கெட். அதனால் படம் தெலுங்கிலும் வெளியாகிறது. இந்தக் காரணத்துக்காகவே செலவு பற்றி யாரும் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை.
தமன் எஸ். இசையமைக்க விவேகா பாடல்கள் எழுதியுள்ளார். சென்ற வாரம் வெளியாக வேண்டிய படம் தெய்வத்திருமகள் மற்றும் ஹாரிபாட்டர் ரிலீஸ் காரணமாக ஒருவாம் தள்ளி ஜூலை 22ஆம் தேதி வெளியாகிறது.