Publish Date: Thu, 09 Feb 2023 (11:14 IST)
Updated Date: Thu, 09 Feb 2023 (11:20 IST)
தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகரான விஜய் இன்று தளபதி என்ற அந்தஸ்தில் மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்து வருகிறார். இவர் இவ்வளவு பெரிய நடிகராக வருவதற்கு மிக முக்கிய அடித்தளமாக இருந்தது அவரின் தந்தை எஸ்ஏ சந்திர சேகர் தான்.
அந்தவகையில் எஸ்ஏசி இயக்கத்தில் விஜய் நடிப்பில் 1997ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஒன்ஸ்மோர். இப்பட்ட்டத்தில் சிவாஜிகனேஷன் , சரோஜாதேவி, மணிவண்ணன், சிம்ரன் என மிகப்பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர்.
அதன் படத்தின் படப்பிடிப்புற்கு ஒரு நாள் சிம்ரன் தாமதமாக வந்துள்ளார். அவருக்காக மொத்த படக்குழுவுமே காத்திருந்தனராம். இதனால் கடுப்பான எஸ்ஏசி அவர் வரும் வரை காத்திருந்து கோபமாக திட்டிவிட்டு படப்பிடிப்பையே ரத்து செய்துவிட்டாராம். சிம்ரன் எவ்வளவு கெஞ்சியும் அவர் பேக்கப் செய்துவிட்டாராம்.