Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

த கன்ஸ் ஆஃப் நவரோன் (The Guns of Navarone)

த கன்ஸ் ஆஃப் நவரோன் (The Guns of Navarone)

ஜே.பி.ஆர்

, புதன், 24 செப்டம்பர் 2014 (13:31 IST)
போர் குறித்த திரைப்படங்கள் உலக அளவில் கணிசமான எண்ணிக்கையில் உள்ளன. அவற்றில் இரண்டாம் உலகப் போர் குறித்த திரைப்படங்களே அதிகம். வருடந்தோறும் சில படங்களாவது ஜெர்மனியின் நாஜிப் படைகள் குறித்தும், அவற்றை முறியடித்த அமெரிக்க - பிரிட்டனின் சாகஸம் குறித்தும் வெளியாகின்றன. 
த ஹன்ஸ் ஆஃப் நவரோன் 1962 -இல் வெளியான பிரிட்டன் - அமெரிக்க திரைப்படம். மெக்கனஸ் கோல்ட் போன்ற பிரமாண்ட படங்களை இயக்கிய ஜே.லீ தாம்ஸன் இயக்கியிருந்தார். இரண்டாம் உலகப் போர் குறித்த திரைப்படங்களில் முக்கியமானதாக இன்றும் பிரிட்டன் - அமெரிக்க விமர்சகர்களால் இப்படம் முன் வைக்கப்படுகிறது.

1943 -ஆம் ஆண்டு கிரீஸுக்கும் துருக்கிக்கும் இடையிலான Aegean கடல் பகுதியில் உள்ள கேரோஸ் (Keros)  தீவில் 2,000 பிரிட்டீஷ் ராணுவ வீரர்கள் மாட்டிக் கொள்கிறார்கள்.

ஒரு வார காலத்திற்குள் அந்தத் தீவை ஜெர்மனியப் படைகள் தாக்கப் போவதாக தகவல் கிடைக்கிறது. அப்படி தாக்கினால் இரண்டாயிரம் வீரர்களின் நிலைமையும் எலிப்பொறியில் மாட்டிய நிலையாகிவிடும். இரண்டாயிரம் பேருக்கும் மரணம் நிச்சயம்.
webdunia
கேரோஸ் தீவிலிருந்து வெளியேற கடல்மார்க்கமாக நவரோன் தீவை கடந்தாக வேண்டும். ஜெர்மன் படைகள் நவரோன் தீவின் கடற்கரையில் இரண்டு ராட்சஸ துப்பாக்கிகளை நிர்மாணித்துள்ளது. ரேடாரின் மூலம் துல்லியமாக சுடக்கூடிய துப்பாக்கிகள். Aegean கடல் பகுதியில் செல்லும் எந்த கப்பலும் இந்த இரு ராட்சஸ துப்பாக்கிகளிடமிருந்து தப்ப முடியாது. 
webdunia
கேரோஸ் தீவிலுள்ள வீரர்கள் தப்பிக்க வேண்டுமென்றால் நவரோனில் உள்ள இரு ராட்சஸ துப்பாக்கிகளையும் அழிக்க வேண்டும். மலையை குடைந்து அதில் அமைக்கப்பட்டிருக்கும் துப்பாக்கியை ஜெர்மன் படைகளின் கட்டுக்காவலை மீறி அழிப்பது எளிதல்ல. ஆனால் எந்த பாதுகாப்பிலும் ஒரு குறை இருக்கும்.

நவரோன் தீவின் ஒரு பகுதி செங்குத்தான மலையால் ஆனது. மனிதனோ விலங்குகளோ அதில் ஏறுவது சாத்தியமில்லை. அதனால் அந்த பகுதியில் மட்டும் ஜெர்மன் படைகளின் கண்காணிப்பு குறைவு.

அதன் வழியாக மேலே ஏற முயன்றால் நவரோன் தீவுக்குள் நுழைந்துவிடலாம். பிரிட்டன் அதிகாரிகள் அதற்கான முயற்சியை எடுக்கின்றனர்.நவரோனின் ராட்சஸ துப்பாக்கிகளை அழிக்கும் குழு ஃபிராங்கிளின் என்ற கேப்டனின் தலைமையில் அமைக்கப்படுகிறது. ஆனால் படத்தின் நாயகன் என்றால், ஃப்ராங்கிளின் காயமடைந்த பிறகு குழுவை வழி நடத்தி செல்லும் கேப்டன் கீத் மல்லோரி. மல்லோரி ராணுவ வீரர் என்பதுடன் மலையேற்றத்தில் அனுபவமுள்ளவர்.

போர் குறித்த படங்கள் பலவகைப்பட்டவை. போரின் நெருக்கடி மனிதனுக்குள் ஏற்படுத்தும் உளவியல் சிக்கல்களை, பாதிப்புகளை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் படங்கள் ஒருவகை. தனி மனிதர்களின், ஒரு குழுவின் சாகஸங்களை மையப்படுத்திய படங்கள் இரண்டாவது வகை.

அமெரிக்கா - பிரிட்டனில் தயாராகும் போர் குறித்த பெரும்பாலான படங்கள் இரண்டாம் வகையைச் சேர்ந்தவை. த ஹன்ஸ் ஆஃப் நவரோனும் சாகஸ வகையைச் சேர்ந்ததே.
webdunia

அதனாலேயே அவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். தனது குடும்பம் ஜெர்மானியர்களால் கொல்லப்பட காரணம் மல்லோரி என்று நம்பும், மல்லோரியை தனது கையால் சாகடிப்பதாக சபதம் செய்துள்ள மல்லோரியின் நண்பர் ஆண்ட்ரியா ஸ்டாவ்ரோவும் குழுவில் இடம் பிடிக்கிறார்.

 
கொலை செய்ய தயக்கம் இல்லாத ஓர் இளைஞன், கத்தி வீசுவதில் திறமைசாலியான இன்னொருவர், வெடிகுண்டுகள் செய்வதில் விசேஷ திறமை கொண்ட ஒரு வேதியியல் பேராசிரியர் என குழு தயாராகிறது. நவரோன் சென்ற பிறகு இரு பெண்களும் குழுவுடன் இணைந்து கொள்கிறார்கள்.
webdunia

படத்தின் கதை இயல்பாகவே பிரமாண்டத்தை கொண்டிருப்பதால் படமும் பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் படத்துக்கு காவியத்தன்மையை தருவது, படத்தில் வரும் திருமண நிகழ்ச்சியும் அதன் கொண்டாட்டங்களும்தான்.அந்தக் காட்சியில் வரும் இசையும், பாடல்களும் மொழி தாண்டி அனைவரையும் வசிகீரிக்கக் கூடியது.

போரில் ஒருவருடைய வெற்றி இன்னொருவருடைய தோல்வி மட்டுமில்லை. போரில் சம்பந்தமில்லாத அப்பாவிகளின் துயரமும்தான் என்பதை இப்படம் கோடிட்டு காட்டுகிறது.

 
குழு தப்பித்து சென்றதற்காக திருமண நிகழ்ச்சியை முன்னிட்டு ஆடல் பாடலுடன் மகிழ்ச்சியாக இருந்த ஒரு கிராமமே ஜெர்மன் படையால் அழிக்கப்படுகிறது. அதேபோல், பிரிட்டன் குழு, நவரோன் ராட்சஸ துப்பாக்கியை அழித்ததற்கு நவரோன் மக்கள் அதற்கான விலையை தர வேண்டியிருக்கும் என படத்தில் ஒரு வசனம் வருகிறது.
webdunia

 
1957 -இல் இதே பெயரில் ஸ்காட்லாந்த் எழுத்தாளர் Alistair MacLean எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து லீ தாம்ஸன் இந்தப் படத்தை எடுத்தார். இதுவொரு உண்மைச் சம்பவம்.

படத்தின் நாயகன் கீத் மல்லோரி கதாபாத்திரத்தில் அன்றைய சூப்பர் ஸ்டாரான கிரகோரி பெக் நடித்திருந்தார். அவரது நண்பர் ஆண்ட்ரியாவாக நடித்திருந்த ஆண்டனி க்யின் - இன் நடிப்பு குறிப்பிட்டு சொல்லக் கூடியது
 
போர் குறித்த அமெரிக்க - பிரிட்டன் கிளாஸிக்குகளில் த கன்ஸ் ஆஃப் நவரோனுக்கு முக்கிய இடம் உண்டு.

Share this Story:

Follow Webdunia tamil