மும்பை தங்கம், வெள்ளி சந்தையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் தங்கம்,வெள்ளியின் விலை அதிகரித்தது.
ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.130 அதிகரித்தது. பார் வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ.475 அதிகரித்தது.
லண்டன், ஆசிய நாட்டு சந்தைகளில் தங்கம் வெள்ளியின் விலை அதிகரித்தது.
இங்கு தங்கத்தின் விலை அவுன்ஸ் 963.00/963.20 டாலராக அதிகரித்தது. பார் வெள்ளியின் விலையும் 15.25/15.26 டாலராக அதிகரித்தது.
அயல்நாட்டு சந்தைகளின் தாக்கம், ஆபரண தயாரிப்பாளர்கள் தங்கம், வெள்ளியை வாங்க ஆர்வம் காட்டியதால், இதன் விலைகள் அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
காலை விலை நிலவரம்
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.14,865
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.14,795
பார் வெள்ளி கிலோ ரூ.23,540.