பங்குச்சந்தை இன்று ஏற்றமா? சரிவா? சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Siva
புதன், 3 ஏப்ரல் 2024 (12:04 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று பெரிய அளவில் பங்கு சந்தை ஏற்றமும் இல்லாமல் இறக்கமும் இல்லாமல் நிதானமாக வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் இன்று வெறும் 40 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 73 ஆயிரத்து 948 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி வெறும் 4 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 22457 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது
தேர்தல் வரை பங்கு சந்தை நிதானமாகவே இருக்கும் என்றும் பெரிய அளவில் ஏற்றத்தாழ்வு இருக்காது என்றும் எனவே புதிய முதலீடு செய்தவர்கள் பொறுமை காக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்றைய பங்குச் சந்தையில் ஏபிசி கேப்பிட்டல், கோல்ட் பீஸ், ஐடி பீஸ், கல்யாண் ஜூவல்லர்ஸ், கரூர் வைசியா வங்கி, மணப்புரம் கோல்டு ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் பேங்க் பீஸ், சிப்லா, ஐடிசி உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ: தமிழகத்தில் 4 நாட்கள் பிரதமர் மோடி பிரச்சாரம்.. எந்தெந்த தொகுதிக்கு செல்கிறார்? முழு விவரங்கள்..!


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments