Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென 500 புள்ளிகளுக்கும் மேல் சரிந்த சென்செக்ஸ்.. நிப்டி நிலவரம் என்ன?

Siva
வியாழன், 8 பிப்ரவரி 2024 (11:33 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்த நிலையில் இன்று திடீரென 500 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் குறைந்துள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய முதலே சரிவில் இருந்த நிலையில் தற்போது 590 புள்ளிகள் சரிந்து 71,561 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 178 புள்ளிகள் சரிந்து 21,749 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தை இன்று 500 புள்ளிகளுக்கு மேல் சரிந்தாலும் இனிவரும் நாட்களில் பங்குச்சந்தை அதிகம் உயர வாய்ப்பு இருக்கிறது என்றும் எனவே முதலீட்டாளர்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 
 
இன்றைய பங்குச் சந்தையில் ஏபிசி கேப்பிட்டல், கல்யாண் ஜுவல்லர்ஸ், கரூர் வைசியா வங்கி ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் பேங்க் பீஸ், சிப்லா, கோல்டு பீஸ், ஐடிசி, மணப்புரம் ஆகிய பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments