கடந்த மூன்று நாட்களாக பங்குச்சந்தை ஏற்றம் கண்ட நிலையில் இன்று திடீரென பங்குச்சந்தை சரிவில் இருப்பது முதலீட்டாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை பங்குச்சந்தை இன்று காலை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சற்று முன் சென்செக்ஸ் 250 புள்ளிகள் சரிந்து 69 ஆயிரத்து 396 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்கு சந்தை விட்டு 66 புள்ளிகள் சரிந்து 20 ஆயிரத்து 870 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை அதிக அளவில் ஏற்றம் கண்டு வருவது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அவ்வப்போது இன்றைய நிலை போல் சரிவு இருந்தாலும் மொத்தத்தில் பங்குச்சந்தை ஏற்றம் காணும் என்று தான் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.