Publish Date: Thu, 26 Sep 2024 (11:19 IST)
Updated Date: Thu, 26 Sep 2024 (11:20 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்து வந்த நிலையில், இன்றும் பங்குச்சந்தை உயர்ந்து வருவதால் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் கிடைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 245 புள்ளிகள் உயர்ந்து 85,014 என்ற புள்ளியில் தற்போது வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை 68 புள்ளிகள் உயர்ந்து 26,073 என்ற புள்ளியில் வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தை இந்த வாரம் முழுவதும் ஏற்றத்தில் இருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், எச்.சி.எல் டெக்னாலஜி, ஹிந்துஸ்தான் லீவர், ஐடிசி, ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன. அதேவேளை, ஆசியன் பெயிண்ட், எச்டிஎஃப்சி வங்கி, கோடக் வங்கி, டைட்டான் உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளன என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.