பங்குச்சந்தை வர்த்தகம் சற்று முன் தொடங்கிய நிலையில் இன்று மீண்டும் பங்குச்சந்தை உயர்ந்து உள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே இந்திய பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று பங்குச்சந்தை ஆரம்பத்தில் உயர்ந்தாலும் அதன் பின்னர் வர்த்தக முடிவின் மீது இப்போது சிறிய அளவில் சரிந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் இன்று பங்குச்சந்தை வர்த்தகம் சற்றுமுன் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 168 புள்ளிகள் உயர்ந்து 80 ஆயிரத்து 64 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்குச் சந்தை நிப்டி 58 புள்ளிகள் உயர்ந்து 24 ஆயிரத்து 31 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் ஏபிசி கேப்பிட்டல், ஐடிசி, ஸ்டேட் வங்கி, டாட்டா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து உயர்ந்து வருவதாகவும், சிப்லா, கல்யாண் ஜூவல்லர்ஸ், கரூர் வைசியா வங்கி, மனப்புரம் கோல்டு உள்ளிட்ட பங்குகள் குறைந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.