Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்று நாள் சரிவுக்கு பின் ஏற்றம் கண்ட பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

Siva
வெள்ளி, 31 மே 2024 (09:45 IST)
கடந்த மூன்று நாட்களாக பங்குச்சந்தை சரிவில் இருந்த நிலையில் முதலீட்டாளர்கள் அச்சமடைந்த நிலையில் இன்று மீண்டும் பங்குச்சந்தை உயர்ந்திருப்பது நம்பிக்கையை அளித்துள்ளது. 
 
தேர்தல் முடிவுகள் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் முடிவுக்கு பின்பு சந்தையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று பங்குச்சந்தை சென்செக்ஸ் 520 புள்ளிகளை உயர்ந்து 74 ஆயிரத்து 420 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 
 
அதே போல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 145 புள்ளிகள் உயர்ந்து 22633 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. பங்குச்சந்தை கடந்த மூன்று நாட்களாக சரிவடைந்த நிலையில் முதலீட்டாளர்கள் ஏராளமான நஷ்டத்தை சந்தித்த நிலையில் இன்று பங்கு சந்தை உயர்ந்திருப்பது அவர்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது. 
 
இருப்பினும் மே நான்காம் தேதி தேர்தல் ரிசல்ட் வெளிவர இருக்கும் நிலையில் பாஜகவுக்கு ஆதரவாக ரிசல்ட் வந்தால் பங்குச்சந்தை உச்சம் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
இன்றைய பங்குச் சந்தையில் ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் பாரதி ஏர்டெல்,  இன்ஃபோசிஸ் ஆகிய பங்குகள் சரிந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொன்னதை செய்த பாஜக அமைச்சர்..! பதவியை ராஜினாமா செய்ததால் பரபரப்பு..!!

ஆர்.எஸ் பாரதி மீது அவதூறு வழக்கு.! நானே நீதிமன்றத்தில் ஆஜராவேன்.! அண்ணாமலை..!!

மனம் வெறுத்து தற்கொலை செய்து கொண்ட ரோபோ.. தென்கொரியாவில் ஒரு வித்தியாசமான சம்பவம்..!

ராகுல் காந்திக்கு யாராவது கணக்கு சொல்லி கொடுங்கள்: குஷ்பு கிண்டல்..!

வழி விடாமல் சென்ற ஆட்டோ ஓட்டுநருக்கு நடுரோட்டில் அடி உதை.. இளம்பெண் மீது வழக்குப்பதிவு

அடுத்த கட்டுரையில்
Show comments