இன்று வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை உயர்ந்திருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை 700 புள்ளிகளுக்கும் மேல் சரிந்தது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கும் மேல் அதிகரித்துள்ளது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை வரவழைத்துள்ளது.
இன்று காலை பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் இந்த 301 புள்ளிகள் உயர்ந்து 74 ஆயிரத்து 281 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தை ஆன நிப்டி 35 புள்ளிகள் உயர்ந்து 22504 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்த வாரத்தில் வரும் நாட்களில் இன்னும் பங்குச்சந்தை உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
இன்றைய பங்கு சந்தையில் ஆசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, ஏர்டெல், ஐசிஐசி வங்கி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் ஸ்டேட் வங்கி, டாட்டா மோட்டார்ஸ், உள்ளிட்ட பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.