Publish Date: Tue, 06 Sep 2022 (10:09 IST)
Updated Date: Tue, 06 Sep 2022 (10:10 IST)
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்றத்துடன் இருந்து வருகிறது என்றாலும் இந்த வாரத்தின் முதல் நாளான நேற்று சென்செக்ஸ் உயர்ந்தது என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் சென்செக்ஸ் உயர்ந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது. இருந்தாலும் சென்சார் மிக குறைந்த அளவே உயர்ந்துள்ளதால் எந்த நேரத்திலும் சென்செக்ஸ் சரிந்து விட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இரண்டு புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 59 ஆயிரத்து 748 என்ற புள்ளிகளில் தற்போது வர்த்தமாகி இருக்கிறது
அதேபோல் நிப்டி நேற்றைய நிலையிலேயே அதாவது 17 ஆயிரத்து 664 என்ற புள்ளிகளில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது இன்றைய பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்று கூறப்படுகிறது