தீபாவளிக்கு பின் மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை: இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்!

Webdunia
வியாழன், 27 அக்டோபர் 2022 (10:08 IST)
தீபாவளி வரை பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்தது என்பதும் அதிக அளவில் ஏற்றம் இருந்ததால் கிட்டத்தட்ட 60 ஆயிரம் புள்ளிகளை சென்செக்ஸ் நெருங்கியது என்பதையும் பார்த்தோம் 
 
இந்த நிலையில் தீபாவளிக்குப் பின்னர் இன்று மீண்டும் பங்குத்தந்தை தொடங்கியுள்ள நிலையில் இன்றைய பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 250 புள்ளிகள் உயர்ந்து உள்ளது. இதனை அடுத்து 59 ஆயிரத்து 820 என்ற புள்ளிகளில் சென்செக்ஸ் வர்த்தகமாகி வருவதால் இன்று மாலைக்குள் 60 ஆயிரத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 85 புள்ளிகள் உயர்ந்து 17741 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக தொடர் ஏற்றம் பெற்று வருவது அதில் முதலீடு செய்தவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யாருடன் கூட்டணி?.. அதிமுகவா? காங்கிரஸா?.. விஜய் போடும் அரசியல் கணக்கு!..

தமிழக அரசு பேருந்து டயர் கழன்று ஓடியதால் பரபரப்பு.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்..

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் இயக்க ஒப்புதல்.. சேவை தொடங்குவது எப்போது?

ஓபிஎஸ்க்கு ஒருபோதும் அதிமுகவில் இனி இடமில்லை.. பாஜகவுக்கு 30 தொகுதிகள்: சேலம் மணிகண்டன்

ஆனந்த் அம்பானியின் வனவிலங்கு மையத்தில் மெஸ்ஸி.. யானையுடன் கால்பந்து விளையாடினார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments