தங்கம் விலை கடந்த மூன்று நாட்களாக ஏற்ற இறக்கமின்றி ஒரே விலையில் இருந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சென்னையில் இன்று ஒரு கிராம் 10 ரூபாயும் ஒரு சவரன் 80 ரூபாயும் உயர்ந்துள்ள நிலையில் இன்றைய விலை நிர்ணயம் குறித்து தற்போது பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ரூபாய் 7,150 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 உயர்ந்து ரூபாய் 57,200 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,799 எனவும் ஒரு சவரன் ரூபாய் 62,392 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 100.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 100,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது.