Publish Date: Fri, 13 Dec 2024 (10:01 IST)
Updated Date: Fri, 13 Dec 2024 (10:03 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரு கிராமுக்கு 55 ரூபாயும் ஒரு சவரனுக்கு 440 ரூபாயும் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் வெள்ளி விலை என்ன என்பதை தற்போது பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 55 ரூபாய் குறைந்து ரூபாய் 7,230 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 440 குறைந்து ரூபாய் 57,840 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,892 எனவும் ஒரு சவரன் ரூபாய் 63,136 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 101.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 101,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது