தங்கம் மற்றும் வெள்ளி விலை தினந்தோறும் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்றும் அதேபோல் வெள்ளி விளையாடும் மாற்றமில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று எந்தவிதமான மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூபாய் 7,130 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 57,040 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,778 எனவும் ஒரு சவரன் ரூபாய் 62,224 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 100.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 100,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது.