Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறங்கிய வேகத்தில் மீண்டும் ஏறிய தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

Siva
செவ்வாய், 3 டிசம்பர் 2024 (09:58 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக இறங்கி கொண்டே வந்த நிலையில் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் திடீரென இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது பொது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் 40 ரூபாய் உயர்ந்துள்ளதாகவும் ஒரு சவரன் தங்கம் 320 ரூபாய் உயர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ள நிலையில் இன்றைய சென்னை நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ரூபாய்   7,130 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 320 உயர்ந்து ரூபாய்  57,040 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,778 எனவும் ஒரு சவரன் ரூபாய் 62,224 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 100.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  100,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருவண்ணாமலை மண் சரிவு! தலா ரூ.5 லட்சம் நிவாரணம்! - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

கனமழை பாதித்த மாவட்டங்கள்: மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் அறிவிப்பு..!

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்.. ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ படத்தை பார்த்த பிரதமர் மோடி..!

இன்று காலை 10 மணி வரை 13 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கனமழை எதிரொலி: இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை?

அடுத்த கட்டுரையில்
Show comments