Publish Date: Wed, 13 Nov 2024 (10:36 IST)
Updated Date: Wed, 13 Nov 2024 (10:38 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டே வரும் நிலையில் ஒரு வாரத்தில் மட்டும் ஒரு சவரனுக்கு 1300 ரூபாய் குறைந்துள்ளது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் 40 ரூபாயும் ஒரு சவரன் தங்கம் 320 ரூபாயும் குறைந்துள்ள நிலையில் சென்னை விலை நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ரூபாய் 7,045 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 320 குறைந்து ரூபாய் 56,360 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,550 எனவும் ஒரு சவரன் ரூபாய் 60,400 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 101.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 101,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது