Publish Date: Fri, 04 Oct 2024 (09:58 IST)
Updated Date: Fri, 04 Oct 2024 (10:00 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்து வரும் நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு பத்து ரூபாயும் ஒரு சவரனுக்கு 80 ரூபாயும் உயர்ந்து உள்ள நிலையில் இன்று தங்கம் வெள்ளி விலை குறித்து நிலவரத்தை பார்ப்போம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ரூபாய் 7120 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 உயர்ந்து ரூபாய் 56,960 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,575 எனவும் ஒரு சவரன் ரூபாய் 60,600 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 103.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 103,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது