Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.55000க்கும் மேல் உயர்ந்ததால் அதிர்ச்சி..!

Siva
திங்கள், 16 செப்டம்பர் 2024 (10:25 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளதாகவும் ஒரு சவரன் 55,000க்கும் மேல் விற்பனையாகி வருவதாகவும் கூறப்படுவது தங்க நகை விரும்பிகளுக்கு பெரும் அதிர்ச்சியையும் தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்து பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து  ரூபாய்   6,880 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 120 உயர்ந்து ரூபாய் 55,040 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.56,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,335 எனவும் ஒரு சவரன் ரூபாய் 58,680 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 98.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  98,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐ.ஏ.எஸ் அதிகாரி போல் நடித்த தண்ணீர் விற்பனையாளர்.. ரூ.21.65 லட்சம் தொழிலதிபரிடம் மோசடி..!

தொடரும் அறங்காவலர் பஞ்சாயத்து! குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் ஆடித்திருவிழா ரத்து!

கணவரை விட மனைவி அழகு.. மொட்டையடித்து அசிங்கப்படுத்திய குடும்பத்தினர்.. விரக்தியில் கைக்குழந்தையுடன் பெண் தற்கொலை..!

உங்களுடன் ஸ்டாலின் என்பதற்கு பதில் பொய்களுடன் ஸ்டாலின் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்: ஜெயகுமார்

ரயில்வே கேட்டை மூட மறந்த கேட்கீப்பர்.. ரயில் டிரைவரே இறங்கி வந்து கேட்டை மூடிய விவகாரத்தால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments