Publish Date: Tue, 03 Sep 2024 (10:31 IST)
Updated Date: Tue, 03 Sep 2024 (10:33 IST)
கடந்த சில வாரங்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்றும் அதேபோல் வெள்ளி விலையிலும் மாற்றமில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை எவ்வளவு என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூபாய் 6,670 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 53,360 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.54,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,125 எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,000 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 91.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 91,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது