Publish Date: Wed, 28 Aug 2024 (10:04 IST)
Updated Date: Wed, 28 Aug 2024 (10:05 IST)
கடந்த சில நாட்களாக தங்கம் விலை இறக்கத்தில் இருந்த நிலையில் இன்று தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ள நிலையில் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று தங்கம் ஒரு கிராமுக்கு 20 ரூபாய், ஒரு சவரனுக்கு 160 ரூபாயும் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ரூபாய் 6,715 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 160 உயர்ந்து ரூபாய் 53,720 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.54,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,170 எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,360 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 93.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 93,500.00 எனவும் விற்பனையாகி வருகிறது