Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

Siva
வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (09:53 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் குறிப்பாக பட்ஜெட்டில் தங்கத்திற்கான வரி குறைப்பு அறிவிப்பு வெளியானவுடன் தங்கம் விலை வெகுவாக சரிந்தது என்பதையும் பார்த்தோம். 
 
ஆனால் அதே நேரத்தில் சரிந்த தங்கத்தின் விலை படிப்படியாக மீண்டும் உயர்ந்து வரும் நிலையில் இன்று ஒரு கிராமுக்கு பத்து ரூபாயும் ஒரு சவரனுக்கு 80 ரூபாயும் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து  ரூபாய்   6,565 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 760 உயர்ந்து ரூபாய் 52,520 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.53,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,020 எனவும் ஒரு சவரன் ரூபாய் 56,160 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 89.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  89,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி துணை முதல்வரானால் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்? - ஆர்.பி.உதயக்குமார்!

எந்த பிராண்ட் மதுபானங்களும் வெறும் ரூ.99 தான்.! ஆந்திர அரசு அதிரடி - உற்சாகத்தில் மதுப்பிரியர்கள்.!!

உணவகத்திற்கு சத்துணவு முட்டைகள் விற்பனை- சத்துணவு திட்ட அமைப்பாளர் வசந்தகுமாரி சஸ்பெண்ட்.!!

பெரியாரின் நெஞ்சில் ஈட்டியை குத்தியிருக்கிறது திமுக அரசு! டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு..!

கடன் தொல்லை.. 3 மகன்களுக்கு விஷம் கொடுத்த தாய்.. தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments