Publish Date: Fri, 05 Jul 2024 (09:55 IST)
Updated Date: Fri, 05 Jul 2024 (09:56 IST)
கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருக்கிறது என்பதும் நேற்று கூட தங்கம் விலை 520 ரூபாய் ஒரு சவரனுக்கு உயர்ந்தது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்றும் நேற்றைய விலையில் தான் விற்பனையாகி வருகிறது என்றும் தகவல் வெளில்யாகி உள்ளது. ஆனால் வெள்ளி விலை மட்டும் ஒரு சிறிய ஏற்றம் உள்ளது. இதன் முழு விவரத்தை தற்போது பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் ரூபாய் 6,760 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 54,080 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.55,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,230 எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,840 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 97.70 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 97,700.00 எனவும் விற்பனையாகி வருகிறது