Publish Date: Mon, 27 May 2024 (11:18 IST)
Updated Date: Mon, 27 May 2024 (11:21 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக வீழ்ச்சி அடைந்து கொண்டே வந்தது என்பதும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 55 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த ஒரு சவரன் தங்கம் விலை நேற்று முன்தினம் 53 ஆயிரம் என்ற அளவில் விற்பனையானதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் இன்று திடீரென கிட்டத்தட்ட 500 ரூபாய் தங்கம் விலை உயர்ந்திருப்பது மீண்டும் பொது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரங்களை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து ரூபாய் 6,720 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 520 உயர்ந்து ரூபாய் 53,760 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.54,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,190 எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,520 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 97.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 97,500.00 எனவும் விற்பனையாகி வருகிறது