Publish Date: Wed, 24 Apr 2024 (09:44 IST)
Updated Date: Wed, 24 Apr 2024 (09:46 IST)
நேற்று தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு கிட்டத்தட்ட 1000 ரூபாய்க்கு மேல் சரிந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ரூபாய் 6,730 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 240 உயர்ந்து ரூபாய் 53,840 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.54,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,200 எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,600 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 86.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 86,500.00 எனவும் விற்பனையாகி வருகிறது