Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரும் ஏற்றத்திற்கு பின் திடீரென சரிந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

Siva
திங்கள், 15 ஏப்ரல் 2024 (09:51 IST)
கடந்த சில நாட்களாக தங்கம் விலை உச்சத்திற்கு சென்றது என்பதும் குறிப்பாக ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை நெருங்கியது என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் திடீர் என இன்று தங்கம் கிட்டத்தட்ட 500 ரூபாய் வரை குறைந்துள்ளது பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில்  சென்னையில் இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 65 ரூபாய் குறைந்து ரூபாய் 6,790 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 520 குறைந்து ரூபாய் 54,320 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.55,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,260 எனவும் ஒரு சவரன் ரூபாய் 58,080 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 89.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 89,500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்வதில் சிக்கலா?

எப்போதும் குற்றவாளிகளையே காப்பாற்ற திமுக முயல்வது ஏன்? - அண்ணாமலை பரபரப்பு பதிவு!

திபெத்தில் பயங்கர நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 126 ஆக உயர்வு.. எவரெஸ்ட் சிகரம் ஏற தடை..!

அண்ணா பல்கலை விவகாரம்: எதிர்க்கட்சிகளின் கவன ஈர்ப்பு தீர்மானத்தை ஏற்று கொண்ட சபாநாயகர்..!

மாணவி வன்கொடுமை சம்பவத்தில் ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும்! - த.வா.க வேல்முருகன்!

அடுத்த கட்டுரையில்
Show comments