Publish Date: Fri, 12 Apr 2024 (10:10 IST)
Updated Date: Fri, 12 Apr 2024 (10:11 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக மிக வேகமாக உயர்ந்து வரும் நிலையில் ரூ.54,000ஐ விரைவில் நெருங்கிவிடும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது 55,000ஐ நெருங்கி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஒரே நாளில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு 640 உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை தற்போது பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 80 ரூபாய் அதிகரித்து ரூபாய் 6,805 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 640 அதிகரித்து ரூபாய் 54,440 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.55,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,275 எனவும் ஒரு சவரன் ரூபாய் 58,200 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 90.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 90,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது