Publish Date: Wed, 10 Apr 2024 (10:21 IST)
Updated Date: Wed, 10 Apr 2024 (10:24 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றத்துடன் இருந்து வருகிறது என்பதும் இன்று ஒரே நாளில் ஒரு கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 35 ரூபாய் அதிகரித்து ரூபாய் 6705 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 280 அதிகரித்து ரூபாய் 53,640என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.54,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7175 எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,400 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் 89.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 89000.00 எனவும் விற்பனையாகி வருகிறது