Publish Date: Thu, 04 Apr 2024 (09:53 IST)
Updated Date: Thu, 04 Apr 2024 (13:25 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் குறிப்பாக நேற்று ஒரு சவரன் தங்கம் 52 ஆயிரம் என விற்பனையாகி வந்தது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் இன்று ஒரு சவரனுக்கு ரூபாய் 360 உயர்ந்து தங்கம் விலை உச்சத்துக்கு சென்று இருப்பது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரங்களை பார்ப்போம்.
இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு 45 ரூபாயும் ஒரு சவரனுக்கு 360 ரூபாயும் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராம் ரூபாய் 6,545 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் ரூபாய் 52,360 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7015 எனவும் ஒரு சவரன் ரூபாய் 56,120 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 84.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 84,000 எனவும் விற்பனையாகி வருகிறது