Publish Date: Sat, 23 Mar 2024 (12:55 IST)
Updated Date: Sat, 23 Mar 2024 (12:57 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு 15 ரூபாயும் ஒரு சவரனுக்கு 120 ரூபாயும் குறைந்துள்ளது. அதேபோல் வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பார்ப்போம்
தங்கம் விலை இன்று ஒரே நாளில் தங்கம் ஒரு கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து கிராம் ரூபாய் 6,185 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 49,480 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6655 எனவும் ஒரு சவரன் ரூபாய் 53,240 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 100 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் ரூபாய் 80.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 80,500.00 எனவும் விற்பனையாகி வருகிறது