Publish Date: Mon, 18 Mar 2024 (11:24 IST)
Updated Date: Mon, 18 Mar 2024 (11:25 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏறிய நிலையில் இந்த வாரம் ஏறிய வேகத்தில் இறங்கி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று ஒரே நாளில் ஒரு சவரனுக்கு 200 ரூபாய் தங்கம் விலை இறங்கிய நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து ரூபாய் 6,090 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 குறைந்து ரூபாய் 48,720 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6,560 எனவும் ஒரு சவரன் ரூபாய் 52,480 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் 80.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 80000.00 எனவும் விற்பனையாகி வருகிறது