Publish Date: Thu, 22 Feb 2024 (10:38 IST)
Updated Date: Thu, 22 Feb 2024 (10:41 IST)
இன்று ஒரே நாளில் தங்கம் விலை 80 ரூபாய் ஒரு சவரனுக்கு குறைந்துள்ளதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை தற்போது பார்ப்போம்.
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு 10 ரூபாய் குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ரூபாய் 5800 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 குறைந்து ரூபாய் 46,400 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6,270 எனவும் ஒரு சவரன் ரூபாய் 50,160 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் 76.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 76,500.00 எனவும் விற்பனையாகி வருகிறது