Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திடீரென ரூ.520 உயர்ந்தது தங்கம் விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

திடீரென ரூ.520 உயர்ந்தது தங்கம் விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!
, வெள்ளி, 17 நவம்பர் 2023 (10:44 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் ஒரு சவரன் தங்கம் விலை 520 ரூபாய் உயர்ந்துள்ளது பொது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து பார்ப்போம்
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 65 ரூபாய் அதிகரித்து ரூபாய் 5700.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 520 அதிகரித்து ரூபாய் 45600.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6170.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 49360.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை 150 காசுகள் அதிகரித்து ரூபாய் 79.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 79500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்: தென்னக ரயில்வே அறிவிப்பு..!