Publish Date: Fri, 20 Oct 2023 (10:48 IST)
Updated Date: Fri, 20 Oct 2023 (10:49 IST)
தங்கம் விலை இன்று ஒரே நாளில் கிராமுக்கு 75 ரூபாயும் ஒரு சவரனுக்கு 600 ரூபாயும் உயர்ந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 75 ரூபாய் அதிகரித்து ரூபாய் 5660.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 600 அதிகரித்து ரூபாய் 45280.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6130.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 49040.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு எந்தவித மாற்றமும் இன்ரி ரூபாய் 77.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 77500.00 எனவும் விற்பனையாகி வருகிறது