Publish Date: Sat, 22 Jul 2023 (10:38 IST)
Updated Date: Sat, 22 Jul 2023 (10:40 IST)
விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் நேற்றைய திடீரென தங்கம் விலை 40 ரூபாய் குறைந்தது. இந்த நிலையில் இன்றும் இரண்டாவது நாளாக ஒரு கிராமுக்கு 15 ரூபாய் தங்கம் விலை குறைந்து உள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாய் சரிந்து ரூபாய் 5555.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 120 சரிந்து ரூபாய் 44440.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6022.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 48176.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 150 காசுகள் சரிந்து ரூபாய் 80.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 80500.00 எனவும் விற்பனையாகி வருகிறது