Publish Date: Thu, 29 Jun 2023 (10:39 IST)
Updated Date: Thu, 29 Jun 2023 (10:40 IST)
தங்கம் வெள்ளி கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்த நிலையில் இன்று திடீரென சரிந்துள்ளது. இதனை அடுத்து தங்கம் வாங்குவதற்கு சரியான நேரம் இதுதான் என தங்க நகை முதலீட்டாளர்கள் தெரிவித்து வருகின்றனர்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 9 ரூபாய் சரிந்து ரூபாய் 5437.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 72 சரிந்து ரூபாய் 43496.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5892.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 47136.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை 40 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூபாய் 75.30 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 75300.00 எனவும் விற்பனையாகி வருகிறது