Publish Date: Sat, 29 Apr 2023 (10:19 IST)
Updated Date: Sat, 29 Apr 2023 (12:37 IST)
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை சரிந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது பொது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை தற்போது பார்ப்போம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5630.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 உயர்ந்து ரூபாய் 45040.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6096.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 48768.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 40 காசுகள் உயர்ந்து ரூபாய் 80.40 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 80400.00 எனவும் விற்பனையாகி வருகிறது