Publish Date: Fri, 05 Aug 2022 (09:45 IST)
Updated Date: Fri, 05 Aug 2022 (09:46 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் விலை மாற்றமின்றி நேற்றைய விலையில் விற்பனையாகி வருகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூபாய் 4865.00 என விற்பனையான நிலையில் இன்றும் அதே விலையில் விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் விலை மாற்றமின்றி ரூபாய் 38920.00என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5267.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 42136.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 20 காசுகள் குறைந்து ரூபாய் 63.60 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 63600.00 எனவும் விற்பனையாகி வருகிறது