பங்குச்சந்தை சூறாவளி ஏற்றம்: நிஃப்டி 26,000 புள்ளிகளை கடந்து சாதனை!

Siva
வியாழன், 23 அக்டோபர் 2025 (10:20 IST)
இரண்டு நாட்கள் தீபாவளி விடுமுறைக்கு பிறகு, இந்திய பங்குச்சந்தைகள் இன்று காலை அமோகமான ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கின.
 
தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி வரலாறு காணாத புதிய உச்சமாக, 26,000 புள்ளிகளை தாண்டியது. வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே நிஃப்டி 150.35 புள்ளிகள் அதிகரித்து, 26,018.95 புள்ளிகளை எட்டியது.
 
அதேபோல், மும்பைப் பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ், வர்த்தகத்தில் 520.61 புள்ளிகள் வலுப்பெற்று, 84,946.95 என்ற புள்ளிகளில் வர்த்தகமானது. காலை நிலவரப்படி, சென்செக்ஸ் 85,190 புள்ளிகளுடனும், நிஃப்டி 26,076 புள்ளிகளுடனும் வர்த்தகமானது.
 
ஐ.டி. மற்றும் வங்கி துறைப் பங்குகள் அதிக லாபத்தை ஈட்டி வருவதே இந்த ஏற்றத்திற்கு காரணமாகும். இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, எச்சிஎல் டெக்னாலஜிஸ், டைட்டன் கம்பெனி, டாடா மோட்டார்ஸ் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் போன்ற முன்னணி நிறுவன பங்குகள் சென்செக்ஸில் லாபத்துடன் வர்த்தகமாகி வருகின்றன. 
 
இந்த திடீர் ஏற்றம் முதலீட்டாளர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலர் பயிற்சி: திருச்சூரில் மைதானத்தில் இளம் பெண் உயிரிழப்பு

ரீல்ஸ் மோகத்தால் யமுனை ஆற்றில் தவறி விழுந்த பாஜக எம்எல்ஏ!

பீகார் தேர்தல்: மாதம் ரூ.2500 மகளிர் உதவித்தொகை.. வாக்குறுதிகளை அள்ளி வீசிய இந்தியா கூட்டணி..!

முதல்வர் ஸ்டாலின் தென்காசி வரும்போது எதிர்ப்பு தெரிவிப்போம்: மேலகரம் பெண்கள் ஆவேசம்..!

'SIR' வாக்காளர் திருத்த பணிக்கு கேரள முதல்வர் கடும் எதிர்ப்பு! பாஜகவின் சதி என குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments