Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2வது நாளாக ஏற்றத்தில் பங்குச்சந்தை.. மீண்டும் பழைய நிலைக்கு செல்லுமா?

Siva
வியாழன், 6 மார்ச் 2025 (11:55 IST)
கடந்த சில நாட்களாக பங்குச் சந்தை மிக மோசமாக சரிந்து வந்ததால், முதலீட்டாளர்கள் லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் நஷ்டம் அடைந்தனர் என்று தகவல் வெளியானது.
 
இந்த நிலையில், நேற்று திடீரென 700 புள்ளிகளுக்கு மேலாக சென்செக்ஸ் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இன்றும் பங்குச் சந்தை ஏற்றத்தில் இருப்பதால், படிப்படியாக மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
சற்று முன், மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 180 புள்ளிகள் உயர்ந்து 73,912 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அதேபோல், தேசிய பங்குச் சந்தை நிப்டி 70 புள்ளிகள் உயர்ந்து 22,400 புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
 
இன்றைய பங்குச் சந்தையில் ஆசியன் பெயிண்ட்ஸ், டாடா ஸ்டீல், ஆக்ஸிஸ் வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், பஜாஜ் பைனான்ஸ், சன் பார்மா, HCL டெக்னாலஜி, ஸ்டேட் வங்கி, TCS, இன்டஸ் இண்ட் வங்கி ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
அதேபோல், Zomato, மாருதி, டாடா மோட்டார்ஸ், பாரதி ஏர்டெல், இன்போசிஸ், HDFC வங்கி, ITC, கோடக் மகேந்திரா வங்கி, டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் சரிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போராட்டம் நடத்துங்க!? இந்த 3 மாவட்டங்கள் முதல் டார்கெட்! - தவெக விஜய் அதிரடி!?

தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

மும்மொழி மட்டுமல்ல, 10 மொழிகளை மாணவர்களுக்கு ஊக்குவிப்பேன்: சந்திரபாபு நாயுடு..!

பிளஸ் 1 தேர்விலும் தமிழ் பாடத்தை எழுத வராத மாணவர்கள்.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments