Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்று 1100 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்த சென்செக்ஸ்.. இன்று 3வது நாளாகவும் உயர்வு..

Siva
புதன், 19 மார்ச் 2025 (10:10 IST)
நேற்று முன்தினம் பங்குச்சந்தை உயர்ந்து, இந்த வாரமே பாசிட்டிவாக தொடங்கிய நிலையில், நேற்று திடீரென 1100 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
 
இந்த நிலையில், இன்று மூன்றாவது நாளாகவும் பங்குச்சந்தை ஏற்றத்தில் இருப்பது முதலீட்டாளர்களுக்கு மேலும் நம்பிக்கையை அளித்துள்ளது. இன்று காலை பங்குச்சந்தை தொடங்கியது முதலே ஏற்றத்தில் இருந்து வருகிறது.
 
சற்று முன் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 99 புள்ளிகள் உயர்ந்து 75,400 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிப்டி 36 புள்ளிகள் உயர்ந்து 22,809 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
 
இன்றைய பங்குச்சந்தையில் டாட்டா ஸ்டீல், பஜாஜ் பைனான்ஸ்,  ஆக்ஸிஸ் வங்கி, ஸ்டேட் வங்கி, கோடக் வங்கி, டாட்டா மோட்டார்ஸ், பாரதி ஏர்டெல், ஏசியன் பெயிண்ட், HDFC வங்கி,  ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளன.
 
அதேபோல், ICICI வங்கி, ஹிந்துஸ்தான் லீவர், டைட்டான், மாருதி, ஐடிசி, சன் பார்மா, டெக் மகேந்திரா, இன்ஃபோசிஸ், டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments