5 நாட்களில் 3,932.86 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. ரூ.9 லட்சம் கோடி வரை இழந்த முதலீட்டாளர்கள்

Mahendran
சனி, 21 டிசம்பர் 2024 (12:27 IST)
இந்த வாரம் திங்கள் முதல் வெள்ளி வரை, இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் 3,932.86 புள்ளிகள் சரிந்ததை அடுத்து முதலீட்டாளர்கள் சுமார் ஒன்பது லட்சம் கோடி நஷ்டம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஐந்து நாட்களிலும் பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, நேற்று மட்டும் 1100 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் சரிந்ததால், மிகப்பெரிய நஷ்டம் முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கிறது.

வாரத்தின் ஐந்து நாட்களிலும் ஒட்டுமொத்தமாக மிகப்பெரிய சரிவை சந்தித்ததால், முதலீட்டாளர்கள் சுமார் ஒன்பது லட்சம் கோடி வரை இழந்திருப்பதாக கூறப்படுகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றதுதான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

பங்குச்சந்தை சரிவின் காரணமாக, அதைச் சார்ந்திருந்த மியூச்சுவல் பண்டுகளின் மதிப்பும் மோசமாக சரிந்துள்ளது. இதன் காரணமாக, அதில் முதலீடு செய்தவர்களும் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

திங்கள் முதல் பங்குச்சந்தை மீண்டும் உயரும் என்ற நம்பிக்கையுடன் முதலீட்டாளர்கள் இருக்கின்றனர். ஆனால் நிலைமை மேலும் சரிவடைந்தால், முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments