கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை மிகப்பெரிய சரிவடைந்து ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் விழுந்தது என்பதை பார்த்தோம். இதன் காரணமாக முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டம் அடைந்தனர்
இந்த நிலையில் பெரும் சரிவுக்கு பின்னர் இன்று வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை சென்செக்ஸ் உயர்ந்துள்ளதால் பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது
சற்றுமுன் பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 80 புள்ளிகள் உயர்ந்து 58 ஆயிரத்து 915 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 20 புள்ளிகள் உயர்ந்து 17 ஆயிரத்து 550 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த வாரம் முழுவதுமே பங்குச் சந்தை ஏற்றத்தில் தான் இருக்கும் என பங்குச்சந்தை நிபுணர்கள் கணிப்பு உள்ளதால் முதலீட்டாளர்களுக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது