Publish Date: Thu, 25 Aug 2022 (09:33 IST)
Updated Date: Thu, 25 Aug 2022 (09:34 IST)
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்துவரும் நிலையில் இன்று காலை முதல் பங்கு சந்தை ஏற்றத்தில் இருப்பது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
இன்று காலை பங்கு சந்தை தொடங்கியவுடன் மும்பை பங்குச்சந்தை நிப்டி 315 புள்ளிகள் உயர்ந்து 59 ஆயிரத்து 400 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 90 புள்ளிகள் வரை உயர்ந்தது 17,500 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த வாரத்தில் ஓரிரு நாட்கள் பங்குச்சந்தை சரிந்தாலும் மாலையில் மீண்டும் பங்குச்சந்தை உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்து வருகிறது
அந்த வகையில் இன்று காலையே பங்குச்சந்தை உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது