இந்திய பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் சென்செக்ஸ் 650 புள்ளிகளுக்கு மேல் சரிந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை பங்குச்சந்தை இன்று 675 புள்ளிகள் சரிந்து 66,895 என்ற போட்டிகளில் விற்பனையாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்கு சந்தை யான நிப்டி 168 புள்ளிகள் சரிந்து 19,811 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது.
பங்குச்சந்தை மிக அதிக அளவில் உயர்ந்துள்ளதால் ஏராளமானோர் லாபத்தை புக் செய்து வருகின்றனர் என்றும் அதனால் தான் பங்குச்சந்தை சரிகிறது என்றும் கூறப்படுகிறது
பங்குச்சந்தை மீண்டும் உயர அதிக வாய்ப்பு இருப்பதாகவும் எனவே முதலீட்டாளர்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் பங்குச்சந்த நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்