இந்த வாரம் திங்கள் செவ்வாய் ஆகிய இரண்டு நாட்களும் பங்குச்சந்தை உயர்ந்த நிலையில் முதலீட்டாளர்கள் பெரும் லாபம் அடைந்தனர் என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் இரண்டு நாள் ஏற்றத்திற்கு பின்னர் தற்போது சற்றே பங்கு சந்தை இன்று சரிந்து உள்ளது. பங்குச்சந்தை மிக அதிக அளவு உயர்ந்துள்ளதால் லாபத்தை புக் செய்ய முதலீட்டாளர்கள் போட்டி போட்டு வருவதால் பங்கு சந்தை சற்று இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 75 புள்ளிகள் சரிந்து 45,400 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 15 புள்ளிகள் சரிந்து 19,373 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பங்குச்சந்தை இன்று சற்றே குறைந்து இருந்தாலும் நாளை மற்றும் நாளை மறுநாள் உயர்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.