வரலாறு காணாத உச்சத்தில் பங்குச்சந்தை.. சென்செக்ஸ் 65000ஐ தாண்டியது..!

Webdunia
திங்கள், 3 ஜூலை 2023 (09:52 IST)
பங்குச்சந்தை கடந்த சில மாதங்களாக உயர்ந்து கொண்டே வருகிறது என்பதையும் கடந்த ஆண்டு 52,000 என்று இருந்த சென்செக்ஸ் தற்போது 65 ஆயிரத்தை தாண்டி உள்ளத்தை அடுத்து முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
வாரத்தின் முதல் நாளான இன்று சென்செக்ஸ் 440 புள்ளிகள் உயர்ந்து 65,162 என்ற புள்ளிகளில் தற்போது வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் நிப்டி 120 புள்ளிகள் உயர்ந்து 19,310 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. 
 
வரலாறு காணாத அளவில் பங்குச்சந்தை உயர்ந்துள்ளதை அடுத்து அதில் முதலீடு செய்தவர்களுக்கு பல மடங்கு லாபம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட அனைத்து துறைகளின் பங்குகளும் 52 வார அதிகபட்ச விலையில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பங்குச்சந்தை இன்னும் உயர அதிக வாய்ப்பிருப்பதாகவும் சென்செக்ஸ் இன்னும் ஒரு சில மாதங்களில் 70 ஆயிரம் செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது .
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 18 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

முயல்வேட்டையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் பரிதாப பலி.. திருவண்ணாமலையில் சோகம்..!

சபரிமலைக்கு மாலை போட்ட மாணவர் கருப்பு உடை அணிய தடை.. பள்ளி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு..!

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்தால் நேபாளம் போல் புரட்சி வெடிக்கும்: ஆர்ஜேடி எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments